Loading...

எக்‌ஷெல்லில் படிவம் (Excel Form)

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

உங்களுக்கு ஒரே மாதிரியான தகவல்கள் excel'எக்‌ஷெல்லில் உள்ளீடு செய்ய வேண்டுமெனில், அதன் கட்டங்களினால் (Cellells) உள்ளீடு செய்யும் பொழுது உங்களுக்கு சிலவேளைகளில் சிரமமாகலாம். உங்கள் கண்களுக்கு கூட எரிச்சல் பலவேளைகளில் ஏற்படும். இவற்றில் இருந்து தப்பிக்க அதே நேரத்தில், வேலையையும் மிக வேகமாக முடிக்க உதவுவதுதான் இந்த formsபடிவம் (Form)

முதலில் forms படிவத்தை குயிக்லாஞ்ச் பகுதிக்கு கொண்டு வந்தால், பின்னாளில் உபயோகம் செய்ய எளிமையாக இருக்கும். அதற்கு, பின்வரும் செயலை செய்யவும். இந்த வழிமுறை தான் எக்‌ஷெல் 2003,2007,2010 மூன்றிலும் ஓரே மாத்ரியாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன் ஆனால் இதில் எக்‌ஷெல் 2007 தான் இதன் வழிகாட்டுதலுக்காக எடுத்துக் கொள்ளப்படிருக்கிறது. முதலில் படிவத்த்தை முகப்பு பக்கத்திற்கு கொண்டு வந்துவிடலாம் , கீழிருக்கும் படங்கள் சிறிதாக இருப்பதாக நினைத்தால் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி காணலாம்.

எக்‌ஷெல்லை திறந்து ஆபிஸ் பட்டனை கிளிக்குவதன் மூலம் Excel Options என்பதை தெரிவு செய்யுங்கள்.


இனி இப்படியாக திறக்கும் அதில் நீங்கள் செய்யவேண்டிய படி நிலைகளை எண்கள் வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கிறது அதன் படியே செய்யுங்கள் எக்‌ஷெல் 2003, எக்‌ஷெல் 2010 கொஞ்சம் மாறுதலாய் இருக்கும்.


இப்பொழுது உங்கள் எக்‌ஷெல்லில் நான் கீழிருக்கும் படத்தில் அடையாளப்படுத்தியுள்ளது போல ஒரு ஐகான் உங்கள் குயிக் லாஞ்ச் ரிப்பனில் வந்து அமர்ந்திருக்கும்.


இனி எப்படி படிவத்தை உபயோகபடுத்துவது என பார்க்கலாம் உதரணமாக உங்களிடம் இருக்கும் டேட்டாவானது Sl.No, Item, INV, Remarks என்பதான நிலைகளை கொண்டது என்பதாக நினைவில் கொள்ளுங்கள், முதலில் அதற்கான பெயரை கொடுத்து விடுங்கள் அடுத்ததாக நீங்கள் செய்யவேண்டியது நான் கட்டமிட்டு அடையாள எண் 9 என குறித்திருக்கிறேன் பாருங்கள் அந்த இடத்தில் ஏதாவது ஒரு செல்லில் கிளிக்கி நாம் முன்னமே குயிக் லாஞ்ச் ரிப்பனில் இனைத்த படிவத்தை கிளிக்கினால் ஒரு பாப் அப் திறக்கும் அதில் ஓக்கே கொடுத்து விடுங்கள்.


நீங்கள் ஓக்கே கொடுத்ததும் படத்தில் உள்ளது போல ஒரு படிவம் வந்திருக்கும் இதன் வழியாக நீங்கள் கொடுக்க வேண்டிய டேட்டாக்களை பூர்த்தி செய்யலாம் இதன் வழியாக தேடுதல் வசதியும் இருக்கிறது.


நான் உதாரணத்துக்கு மட்டுமே இந்த வகையில் பதிவு செய்துள்ளேன் நீங்கள் உங்கள் விருப்பதிற்கேற்றார் போல படிவத்தை தயார் செய்து கொள்ளலாம்

ஜி.என்


0 ஊக்கப்படுத்த எழுதுங்க:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP