கீ போர்டில் மேஜிக் நடக்கும்.
வியாழன், 10 மார்ச், 2011
கணிணி மிகப்பெரிய தொழிற்நுட்ப வெளிபாடு என்பது நாம் அறிந்ததே. ஆனாலும் அதன் நுணுக்கங்களை பெரும்பாலோர் சரியாக அறிந்துக் கொள்வதில்லை.
மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும் பல மேஜிக் வேலையெல்லாம் கணினியில் உள்ளது. அவ்வப்போது அதை அப்டேட் செய்கிறேன். இன்றைக்கு ஒன்றைப் பார்ப்போம்.
கீ போர்டில் NUMBER LOCK - CAPS LOCK போன்ற கீகளை அறிந்துக் கொள்ள - அவை வேலை செய்கின்றது என்பதை காட்ட சிறு பல்ப் (power light) பளிச்சென்று மின்னுவதை நாம் பார்த்திருப்போம்.
கீபோர்டில் உள்ள மூன்று லைட்டுகளும் தொடர்ச்சியாக டிஸ்கோ மாடலில் மாறி மாறி மின்ன வைக்கும் டிரிக்கை இப்போது பார்க்கலாம்.
நோட்பேடை (notepad) திறந்துக் கொள்ளுங்கள்.
கீழுள்ள கோட்டை அப்படியே காப்பி எடுத்து நோட்பேடில் பேஸ்ட் பண்ணுங்கள்
Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
wshshell.sendkeys "{NUMLOCK}"
wshshell.sendkeys "{SCROLLLOCK}"
loop
பிறகு நோட்பேடின் file ஓப்பன் செய்து save as கொடுக்கும் போது Disco.vbs என்று பெயர் கொடுத்து சேவ் செய்துக் கொள்ளுங்கள். (இந்த பைல் டிஸ்க்டாப்பில் இருப்பது போன்று சேவ் செய்வது நல்லது). இப்போது டிஸ்க்டாப்பை பார்த்தால் பட சுருல் போன்று Disco என்ற பெயரில் ஒரு பைல் உருவாகியுள்ளதை காண முடியும். அதை டபுள் கிளிக் செய்து விட்டு "கீபோர்டை"" பாருங்கள். கீபோர்டில் உள்ள பல்புகள் மாறி மாறி டிஸ்கோ மின்னல்களை கொடுக்கும். அதே பைலை மீண்டும் டபுல்கிளிக் செய்தால் விளக்குகள் இன்னும் வேகமாக மின்னுவதை கண்டு ரசிக்கலாம்.
இதை நிறுத்த வேண்டுமானால் டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து டாஸ்க் மேனஜரில் உள்ள wscript.exe என்ற பைலை நீக்கி விடுங்கள். அவ்வளவுதான்.
செய்து பார்த்து விட்டு கருத்திடுங்கள்.
0 ஊக்கப்படுத்த எழுதுங்க:
கருத்துரையிடுக