Loading...

கணினி கேள்வி பதில்

சனி, 7 மே, 2011

கேள்வி: இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை, முழுமையாக நீக்க என்ன செய்ய வேண்டும்?
-சே. திருமூர்த்தி, மதுரை.

பதில்: சில புரோகிராம்களில், அதனை நீக்குவதற்கான வழிகளையும் தந்திருப் பார்கள். ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராம் லிஸ்ட்டில் பார்த்தால், Uninstall என்று ஒரு பிரிவு இருக்கும். அதில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் நீக்க விரும்புவதனை உறுதி செய்து, கேட்கும் கேள்விகளுக்கான பதில் தெரிவித்தால், கூடுமானவரை முழுமையாக நீக்கப்படும்.

கண்ட்ரோல் பேனல் சென்று, ஆட் / ரிமூவ் (Add or Remove) புரோகிராம் பட்டியலைப் பெற்று, அதில் நீக்க விரும்பும்புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, Remove என்ற பட்டனை அழுத்தலாம். இந்த முறையில் முழுமையாக அது நீக்கப்படும் எனச் சொல்ல முடியாது. தொடர்பான சில சிறிய புரோகிராம்கள் தங்குவதுண்டு.

அடுத்ததாக, Revo Uninstaller என்பன போன்ற தர்ட் பார்ட்டி புரோகிராம்களின் உதவியை நாடலாம். இவை இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை முழுமையாக நீக்கும்.

கேள்வி: தொழில் நுட்ப ரீதியாக மட்டுமின்றி, பல வேளைகளில், சாதாரணமான இரண்டு விஷயங்களுக் கிடையேயுள்ள வேறுபாடு சட்டெனத் தெரிவதில்லை. எடுத்துக் காட்டாக, ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. இந்த சூழ்நிலைகளில் நமக்கு உதவிடும் இணைய தளங்கள் ஏதேனும் உண்டா?
-டி. வித்யா சுந்தர், கோவை.

பதில்: உங்கள் தேவையை மனதில் கொண்டு இணையத்தில் உலா வந்த போது, மிகவும் ஆச்சரியமாக உங்கள் சந்தேகத்தின் பெயரிலேயே ஒரு தளம் இயங்குவது தெரிய வந்தது. இதன் பெயர் டிபரன்ஸ் பிட்வீன் டாட் காம். (differencebetween.com) இத்தளத்தின் முழு முகவரி http://www.differencebetween.com/.
இந்த தளம் சென்றவுடன், உங்களுக்கு விளக்கம் தேவைப்படும் பொருள் எந்த பிரிவில் உள்ளதோ, அந்த தலைப்பில் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் மெனு சென்று பெறலாம். டெக்னாலஜி, பேஷன், சயின்ஸ் அண்ட் நேச்சர், பொதுவானவை, மக்கள், ஹெல்த், கல்வி எனப் பல பிரிவுகள் உள்ளன.

இதன் சிறப்பு, உங்களுக்கு நன்கு தெரிந்த இரண்டு விஷயங்களுக் கிடையேயான வேறுபாடு குறித்த உங்கள் குறிப்புகளையும் இதில் அப்லோட் செய்திடலாம்.

கேள்வி: வீட்டுக் கம்ப்யூட்டரில், எம்.எஸ். ஆபீஸ் 2007 புரோகிராம், விண்டோஸ் 7 ஓ.எஸ்.ஸில் பயன்படுத்துகிறேன். இதில் பி.டி.எப். பைல் தயாரிக்க முடியவில்லை. ஆனால் என் அலுவலகக் கம்ப்யூட்டரில் உள்ளது. ஏன்? இதனைக் கொண்டு வர என்ன செய்திட வேண்டும்?
-டி.முருகதாஸ், திருத்தங்கல்.

பதில்: கவலைப் பட வேண்டாம். வீட்டில் உள்ள ஆபீஸ் தொகுப்பில் பி.டி.எப். பைல் உருவாக்கும் வசதி அமைக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அதற்கான ஆட் ஆன் தொகுப்பு இன்ஸ்டால் ஆகாமல் இருக்கலாம். இதனைக் கொண்டு வர, உங்களுக்குத் தேவையானது 2007 Microsoft Office Addin: Microsoft Save as PDF or XPS என்கிற ஆட் ஆன் தொகுப்பு. இதனை மைக்ரோசாப்ட் இணைய தளத்திலிருந்தே பெற்றுக் கொண்டு இன்ஸ்டால் செய்திடவும். அந்த தளம் சென்று, ஆட் ஆன் தொகுப்பு பெயர் கொடுத்துத் தேடிப் பெறவும். இதற்கு நீங்கள் கட்டணம் செலுத்திய ஆபீஸ் தொகுப்பினைப் பதிந்திருக்க வேண்டும். விண்டோஸ் 7 தொகுப்பும், நகல் தொகுப்பாக இருக்கக் கூடாது.

கேள்வி: எக்ஸெல் தொகுப்பில் எட்ஜ் என்றும் ரேஞ்ச் (டேட்டா ரேஞ்ச்) என்றும் சொல்லப்படும் இரண்டும் ஒன்றுதானே. ஏன் இரண்டு லேபிள் தருகிறோம். வேறுபாடு உண்டா?
-கே. பிரியா, சிவகாசி.
பதில்: இரண்டும் செல்கள் குறித்த சொற்கள் என்றாலும், வேறுபாடு உள்ளது. டேட்டா தரப்பட்டுள்ள கடைசி செல்லை ஆங்கிலத்தில் “edge” என்று அழைக்கிறோம். ஒரு டேட்டா ரேஞ்சில் (Data Range) இறுதியாக டேட்டாவைக் கொண்டிருக்கின்ற செல்லை இது குறிக்கிறது. டேட்டா ரேஞ்ச் என்பது தொடர்ச்சியாக டேட்டாவைக் கொண்டிருக்கின்ற செல்களாகும். ரேஞ்ச் என்பதன் முடிவில் ஒரு காலியான படுக்கை வரிசை அல்லது நெட்டு வரிசை இருக்கும். அதன் பின்னால் மேலும் ஒரு டேட்டா ரேஞ்ச் தொடங்கலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டர்களில் ஒன்றில், பல ஆண்டுகளாக விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். தற்போது சிக்கல் வருமோ எனத் தெரிகிறது. எப்படி ரெஜிஸ்ட்ரி பேக் அப் எடுப்பது? பிரச்னை ஏற்பட்டால், பேக் அப் பைலை எப்படி திரும்ப அமைப்பது?
-கே. திலகராணி, விருதுநகர்.
பதில்: ரெஜிஸ்ட்ரியைத் திறந்து அதில் எடிட்டிங் வேலையை மேற்கொள்கையில் சிக்கல் ஏற்பட்டால், இந்த பேக் அப் பயன்படும்.
Start /Run சென்று அங்கு கிடைக்கும் பாக்ஸில் regedit என டைப் செய்திடவும். அடுத்து File மெனு கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Export என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் பாக்ஸில் இதனை சேவ் செய்திட ஒரு இடம் தேர்ந்தெடுத்து அதில் இந்த பைலுக்கு ஒரு பெயர் கொடுக்கவும். நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பெயர் இருக்க வேண்டும். அதாவது என்று இந்த பேக் அப் எடுத்தது என்பது போன்ற தகவலுடன் பெயர் இருப்பது நல்லது.

விண்டோஸ் சிஸ்டம் தானாக ஒரு ரெஜிஸ்ட்ரி பேக் அப் பைலை ஒவ்வொரு முறை நீங்கள் கம்ப்யூட்டரை மூடுகையில் உருவாக்குவது உங்களுக் குத் தெரியுமா? கம்ப்யூட்டரை மூடுகையில் ஒவ்வொரு முறையும் Windows is saving your settings என்று வருகிறது அல்லவா! அப்போது விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி பைலை சேவ் செய்கிறது. இருப்பினும் நாமும் சேவ் செய்வது நமக்கு நல்லது.

சரி, உங்கள் கேள்வியின் அடுத்த பகுதிக்கு வருவோம். பிரச்சினை ஏற்பட்டது என்றால் எப்படி இதனை மீண்டும் இயக்கத்திற்குக் கொண்டு வருவது என்று பார்க்கலாம்.

Registry Editorல் Registry மெனுவில் கிளிக் செய்திடுங்கள். அடுத்து உங்கள் பேக் அப் பைலைச் சுட்டிக் காட்டுங்கள். அதன் பின் Import Registry என்பதில் கிளிக் செய்திடுங்கள். மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்திடுங்கள். சரியாகிவிடும். நீங்கள் வழக்கமாக பேக் அப் செய்திடும் பணியை ஒரு புரோகிராம் மூலம் மேற்கொள்ளும் வழக்கம் உள்ளவரா? கவலையே இல்லை. நீங்கள் அந்த புரோகிராமில் எந்த எந்த பைல்களை எல்லாம் தானாக பேக் அப் செய்திட வேண்டும் என ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருப்பீர்கள் அல்லவா? அதில் இதற்கான இரண்டு பைல்களையும் சேர்த்துவிடுங்கள். சேர்க்க வேண்டிய பைல்களின் பெயர்கள்: “User.dat” மற்றும் “System.dat”.

கேள்வி: வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை, சர்வீஸ் பேக் கொண்டு அப்டேட் செய்யச் சொல்கிறீர்கள். அப்டேட் செய்வதற்கும், வைரஸ் அழிப்பதற்கும் என்ன சம்பந்தம்? அதற்கான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் உள்ளனவே.
-சி. கனகராஜ், சென்னை
பதில்: அப்டேட் பைல் பயன்பாடு என்பது, வரும் முன் காப்பது. வந்தபின் மேற்கொள்ளும் வைத்தியமே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பயன்பாடு. பிரவுசரில் வைரஸ்கள் நுழையக் கூடிய இடங்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப் பட்டு அவற்றைச் சரி செய்திட இந்த அப்டேட் புரோகிராம்கள் வழங்கப் படுகின்றன. எனவே அப்டேட் செய்யப்படாவிட்டால் அந்த குறைகள் உள்ள இடங்கள் வழியாக வைரஸ்கள் நுழைய வாய்ப்புகள் அதிகமாகின்றன. எனவே அப்டேட் செய்து வரும் முன் காத்துக் கொள்வது நல்லது தானே.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில், வரிகளில் இறுதியாக வரும் சொல்லினை, வேர்ட் புரோகிராம் ஹைபன் கொடுத்து அமைக்கிறது. இது எந்த அடிப்படையில் நடைபெறுகிறது? சொல் ஒன்றில் இத்தனை எழுத்துக்கள் இருந்தால் பிரிக்கலாம் என்று ஏதேனும் வரையறை உள்ளதா? இதனை எப்படி அறிந்து கொள்வது?
-கே. எஸ். தீபக் கிருஷ்ணன், திருப்பூர்
பதில்: அருமையான கேள்வி. இந்த ஹைபன் தரும் முறையினை எவரும் இவ்வளவு ஊன்றி எண்ணிப் பார்த்தது இல்லை. வேர்ட் உங்கள் டாகுமெண்ட் டை ஹைபனேட் செய்திடுகையில், ஹைபனேட் செய்யப்படும் சொல்லில் எவ்வளவு பகுதியை முந்தைய வரியில் அமைக்க முடியும் என்று கணக்கிடுகிறது. இதற்காக ஹாட் ஸோன் அல்லது ஹைபனேஷன் ஸோன் என்பதைக் கணக்கிடுகிறது. ஒவ்வொரு வரியிலும் தேவைப்படும்போது இந்த ஹாட் ஸோன் வலது முனையில் கிடைக்கிறது. இந்த ஹாட் ஸோன் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். அதாவது 0.25 அங்குலம் என வைத்துக் கொண்டால் அந்த அளவிற்குள் ஒரு சொல்லை ஹைபனேட் செய்திடமுடிந்தால் மட்டுமே, வேர்ட் ஒரு சொல்லை ஹைபனேட் செய்திடும். இல்லை என்றால் அடுத்த வரிக்குக் கொண்டு வந்திடும். இதனை செட் செய்வதற்குக் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றவும்.
மெனு பாரில் Tools அழுத்திப் பின் Language என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இந்த சப் மெனுவில் Hyphenation என்ற பிரிவு இருக்கும் இதனைக் கிளிக் செய்தால் Hyphenation என்ற சிறிய விண்டோ கிடைக்கும். இதில் ஒரு டாகுமெண்ட் தானாக ஹைபனேட் செய்திடட்டுமா? பெரிய எழுத்துக்களில் உள்ள சொற்களை மட்டும் ஹைபனேட் செய்திடவா? என்ற ஆப்ஷன்களோடு Hot Zone எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற ஆப்ஷனும் தரப்படும். இதனை நாமே செட் செய்து கொள்ளலாம். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறி, ஏதேனும் ஒரு டாகுமெண்ட்டில் இதனைச் சோதனை செய்து கொள்ளலாம்.

0 ஊக்கப்படுத்த எழுதுங்க:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP