டவுன்லோட் பிரச்சனை
செவ்வாய், 10 மே, 2011
கேள்வி: எனது கணினியில் கடந்த இரண்று மூன்று நாட்களாக புதிதாக வந்துள்ள பாஸ்ட் வைப் என்ற சாப்ட் வேரை
டவுன்லோட் செய்து ரென் பன்னும்போது 65 சதவிகிததிற்குமேல் டவ்ன்லோட் ஆனபிறகு இன்டர்நெட் எக்ஸ்புளோர் ஸ்டாப்ட் திஸ் டவ்ன்லோட் ஸின்ஸியர் எரர் என்று வருகிறது என்னிடம் இருந்த இன்டர்நெட் டொவ்ன்லோட் மேனேஜர் தேதி முடிந்து விட்டதால் மீன்டும் டவ்ன் லோட்மேனேஜர் டவ்ன்லோட் செய்தேன். அங்கேயும் இதே பிரச்சனைதான் சொல்கிறது இதை எப்படி கிளீர்செய்வது விளக்கமாக எழுதவும் நன்றி-
நட்புடன்....
அப்துஸ் ஸமது இப்னு குலாம் தஸ்தகீர்
பொதுவாக இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம். முதலில் உங்களின் எக்ஸ்புளோர் பதிப்பு பழையதாக இருந்தால் இந்த சிக்கல் வரலாம். குறிப்பாக எக்ஸ்புளோர் பதிப்பு 6 ஐ பயன்படுத்துபவர்களுக்கு இது போன்ற சிக்கல்கள் தவிக்க முடியாததாகி விடும். பிறகு 7ம் பதிப்பு 8ம் 9ம் பதிப்பு என்று மைக்ரோசாப்ட் பழைய எரர்களையெல்லாம் களைந்து புதிய பதிப்புகளை கொண்டு வந்தது. ஆனாலும் அவ்வப்போது சில இடற்பாடுகள் தென்படத்தான் செய்கின்றன.
புதிய எக்ஸ்புளோர் டவுன்லோட் பகுதி

இதை டவுன்லோட் செய்யுங்கள். பிறகு உங்களுக்கு அந்த பிரச்சனை வராது.
கூகிள் அறிமுகப்படுத்தி இணைய உலகில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் குரோம் என்ற பிரவுஸர் உங்கள் பிரச்சனைக்கு சரியான தீர்வாக அமையும் என்று நினைக்கிறோம். டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பாருங்கள்.

இதன் பிறகும் பிரச்சனைத் தொடர்ந்தால் எழுதுங்கள்.
0 ஊக்கப்படுத்த எழுதுங்க:
கருத்துரையிடுக